வடமாகாண பாடசாலைகளில் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்ந்தும் நடாத்திச் செல்வது தொடர்பாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் கலந்துரையாடி சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் கூறியுள்ளார்.
கடந்த 28ம் திகதி இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக கூறியிருக்கும் கல்வி அமைச்சின் செயலாளர், கிராமப்புற பாடசாலைகளை குறைந்தபட்ச ஆசிரியர்களைக் கொண்டு தொடர்ந்து நடாத்துதல்.
ஏனைய அனைத்துப் பாடசாலைகளிலும் இவ்வாண்டு க.பொ.த சா/ த மற்றும் க.பொ.த உ/த பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான வகுப்புக்களை சமூகமளிக்கக் கூடிய ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் நடாத்துதல்.
இவ்விடயத்தில் பாடசாலைகள் தத் தமது வலயக்கல்விப் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான முடிவுகளை எடுக்கலாம். ஆகவே மாணவர்களின் கல்விக்காக
தம்மால் இயன்றளவு ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் தன்னார்வமாக வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.