
சுகாதார மருத்துவ பணியாளர்களுக்கு புலோலியில் எரிபொருள் நிரப்பு நிலத்தல் எரிபொருள் விநியோகம் இடம் பெறுகிறது.
பிரதி வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசியமான சேவைகளுக்கான எரிபொருள் விநியோகிக்கப்படும் என அரசு அறிவித்ததின் அடிப்படையில் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.






காலை எழு மணியிருந்து காத்திருந்த, சுகாதார மருத்துவ துறையினருக்கு காலை 11:00 மணியிலிருந்து எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது.
வடமராட்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தை மையத்தப்படுத்தி சுமார் 650.பேர்வரை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்பி சென்றனர்.
இதில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட அனைவரும் காத்திருந்தே எரிபொருள் நிரப்பிச்சென்றதுடன் பருத்தித்துறை 551 வது படை பிரிவு பிரிகேடியர் சிந்திக்க விக்கிரமசிங்க ஒழுங்குபடுத்தலில் இரணுவம் பாதுகாப்புடன் இடம் பெற்றது.வீதி பாதுகாப்பு ஒழுங்குகளை பருத்தித்துறை போலீஸ் பொறுப்பதிகாரி தலமையில் இடம் பெற்றன.