
நாட்டில் தற்போதைய நாட்களில், திடீர் மின் துண்டிப்பை சீர் செய்வதில் தாமதம் ஏற்படக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினால் மின்சார சபையின் செயற்பாடுகளுக்கு சவால் ஏற்பட்டுள்ளது.
இதனால், மின்சார சபையின் வாகனங்களை முன்னுரிமை அடிப்படையில் பணிகளில் ஈடுபடுத்த வேண்டியேற்பட்டுள்ளது.
எனவே, மின் துண்டிப்பு ஏற்படும் வேளைகளில் அவற்றை சீர்செய்வதில் தாமதம் ஏற்படக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
எனினும், இந்த நெருக்கடி தமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதொரு விடயமென்ற போதிலும், பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை குறைத்துக்கொள்ள இயலுமானவரை விரைவாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக மின்சார சபை அறிவித்துள்ளது.