மின் உற்பத்திக்காக எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துடன், இலங்கை மின்சார சபை நேற்று நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின் உற்பத்திக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எமது செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்ட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தாவுடன் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது, மின் உற்பத்திக்கு அவசியமான 7,000 மெட்ரிக் தொன் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள இணக்கம் காணப்பட்டதாகவும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.