
மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க 2022 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி முதல் மேலும் ஆறு வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து நந்தலால் வீரசிங்கவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.