
தனது இரு பிள்ளைகளையும் ஆற்றில் வீசிவிட்டு தானும் ஆற்றில் குதித்த நிலையில் 5 வயதான பெண் குழந்தை உயிரிழந்ததுடன், தாயும் 11 வயதான மகனும் காப்பாற்றப்பட்டிருந்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி தாயும் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றய தினம் சந்திரிகா குளத்தில் இடம்பெற்றுள்ளது. தாய் ஒருவர் தனது 5 வயதான மகள் மற்றும் 11 வயதான மகனை ஆற்றில் வீசியுள்ளார்.
பின்னர் தானும் ஆற்றில் குதித்த நிலையில் 5 வயதான பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. பின்னர் பொதுமக்களின் முயற்சியால் தாயும் 11 வயதான ஆண் குழுந்தையும் காப்பாற்றப்பட்டனர்.
அவர்கள் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தாயார் உயிரிழந்துள்ளார்.
11 வயதான மகன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றார்