யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை கொண்டுவர புகைரத சேவையை பெற்றுத்தாருங்கள் வணிகர் கழகம் கோரிக்கை…! அங்கஜன் கடிதம்.. |

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் விநியோக நடவடிக்கைகளுக்கு சலுகை விலையில் புகைரத சேவையை ஒழுங்குபடுத்தி தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசிய உணவு, மருந்துபொருள் விநியோகத்துக்காக தற்போதைய நிலையில் மாற்று வழிகளை ஏற்பாடு செய்து தருமாறு யாழ்.வணிகர் கழகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அங்கஜன் இராமநாதன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். 

அமைச்சருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில்,யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் இதுவரைகாலமும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக ஏராளமான லொறிகளை பயன்படுத்தினர்.

துரதிஷ்டவசமாக தற்போதைய பொருளாதார நெருக்கடியின் கீழ் எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதால் யாழ்.மாவட்ட வர்த்தகர்கள் லொறிகளை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். தற்போதைய நெருக்கடி நிலையானது மேலும் மோசமடைந்து

அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்களுக்கு போக்குவரத்துக்காக சுமார் பத்து அல்லது பன்னிரெண்டு புகையிரத வண்டிகள் தேவைப்படுவதால் அதற்கான செலவை அவர்கள் செலுத்த தயாராக உள்ளனர்.

எனவே இப்பிரச்சினையின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியப் பொருட்களை புகையிரதம் மூலம் சலுகை விலையில் கொண்டு செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews