
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிக்குள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக
அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலைப் பிரதேசத்தில்லுள்ள தெரிவு செய்யப்பட்ட 25 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு தமிழர் தேசியப் பேரவையினரால் தலா பத்தாயிரம் ரூபா வீதம் 250000/- பெறுமதியான உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


ஜெர்மனியில் வசிக்கும் திரு, ச
கபிலன் என்பவரது நிதி பங்களிப்பிலேயே இவ் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தமிழர் தேசியப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்களில் ஒருவரான திரு. தரணிகன் தலைமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழர் தேசியப் பேரவையின் உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.