இலங்கைக்கு சுமார் 90 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளுடன் 3 கப்பல்கள் 13ம் திகதிக்கும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கும் இடையில் வருகைதரவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒவ்வொன்றும் தலா 30,000 மெற்றிக் டன் எரிபொருளை தாங்கி வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, முதலாவது கப்பல் ஜூலை 13 முதல் 15ஆம் திகதிக்குள்ளும், 2ஆவது கப்பல் ஜூலை 29 முதல் 31ஆம் திகதிக்குள்ளும்,
3ஆவது கப்பல் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதியன்றும் வருகை தரும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.