
கிளிநொச்சிபொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரடிப்போக்கு சந்திப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



கிளிநொச்சி போலீஸ் சிறப்பு பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் மெதவல அவர்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய நேற்றைய தினம் 02.07.2022சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் 850 லிட்டர் டீசலும் 950 லிட்டர் மண்ணெண்ணெய் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடயப் பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றம் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் மேதவேல தெரிவித்துள்ளார்