சேனைக்கண்டம் தெற்கு கமக்காரர் அமைப்பின் தலைவர் எம்.ஐ.பகுர்தீன் தலைமையில் இடம்பெற்ற அறுவடை விழாவில் கமநலசேவை அபிவிருத்தி உதவி ஆணையாளர் சாமிலிசோமதாச பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் விசேட அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் கலந்துகொண்டார்.
நிகழ்வில்; கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்கள பிரதிப்பணிப்பாளர் நசார் அக்கரைப்பற்று கிழக்கு கமநலசேவை உத்தியோகத்தர் யு.எல்.சம்சுதீன் சாகாமம் விசேடஅதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.
சமய வழிபாடுகளை தொடர்ந்து அறுவடை விழா சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 8500 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அறுவடைக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.