பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் சமூகத்தின் உணவு பயன்பாட்டு தேவையினை எவ்வாறு பூர்த்தி செய்யும் வகையில் பாரம்பரிய உணவு தயாரிப்பு மற்றும் காட்சிப்படுத்தல் நிகழ்வு மட்டக்களப்பு தீரணியம் திறந்த பாடசாலை நிலத்தில் நடைபெற்றது .
வன்னிக்கோப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு தீரனியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தின் ஏற்பாடடில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
தீரனியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தின் உளநல மருத்துவ சேவை ஆலோசகர் வைத்திய நிபுணர் ஜூடி ஜெயகுமார் வழிகாட்டலின் மட்டக்களப்பு தீரனியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தின் குடும்ப அங்கத்தவர்களுடன் சமூல நலன் சார் அமைப்பினர் இணைந்து இந்த விழிப்புணர்வு செயல் திட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு தீரணியம் திறந்த பாடசாலை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் வன்னிக்கோப் அமைப்பின் குழு உறுப்பினர்கள் , தீரனியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தின் குடும்ப அங்கத்தவர்கள் , சமூக நலன் சார் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்