மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்காவின் ஏற்பாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினையும் தொடர்பாடல்களையும் ஏற்படுத்தும் வகையில் இளைஞர் யுவதிகளுக்கிடையில் மத நல்லிணக்கத்திற்கான சித்திர கண்காட்சிகளும் கலந்துரையாடல்களும் நடாத்தப்பட்டன .
மட்டக்களப்பு காத்தான்குடி , இருதயபுரம் ஆகிய பிரதேச முஸ்லீம் , இந்து ,கிறிஸ்தவ இளைஞர் யுவதிகளுடன் இராணமடு சின்னவத்த பௌத்த இளைஞர் யுவதிகளுக்கிடையிலான இன மத நல்லிணக்கத்திற்கான கலாசார நிகழ்வுகளும் ,சித்திர கண்காட்சியும் அதிதிகளுக்கு நினைவு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடியில் நடைபெற்றது .
வண்ணாத்திப்பூச்சி சமாதான பூங்காவின் திட்டமுகாமையாளர் டி , நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் உ .உதயசிறீதர் , காத்தான்குடி நகர சபை தவிசாளர் எ எச் எம் .அஸ்வர், காத்தான்குடி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஜாஹிதா ஜலால்தீன் ,வண்ணாத்திப்பூச்சி சமாதான பூங்கா ஆலோசனை சபை உறுப்பினர் தோமஸ் கந்தையா, உட்பட மதத்தலைவர்கள், இளைஞர் யுவதிகள் , வண்ணாத்திப்பூச்சி சமாதான பூங்கா உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்
யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை சமாதானத்தின் ஊடாக கட்டியெழுப்பும் வகையில் சிறார்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் வளர்ந்தோரை மையப்படுத்தி இலங்கையில் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டு மாவட்டத்தில் பல் சமய சமூகம் சார்ந்த பணிகளை வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்கா முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.