நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து போதிய பொது போக்குவரத்து இன்மையால், கொழும்பு சிமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை பணிக்குழாமினரின் வருகை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்றில் ஒருவர் நாளாந்தம் சேவைக்கு சமூகமளிப்பதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு சிமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 2,600 பணிக்குழாமினர் உள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். முன்னதாக நாளாந்தம் 100 பேருக்கு விடுமுறை வழங்கப்பட்டாலும் 2,500 பேர் வரை சேவைக்கு சமூகமளித்திருந்தனர்.
எனினும் எரிபொருள் நெருக்கடி காரணமாக மூன்றில் இருவர் மாத்திரமே நாளாந்தம் சேவைக்கு சமூகமளிப்பதாக, கொழும்பு சிமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போதைய நிலையில் வைத்தியசாலை செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.