கறுவா, ஏலக்காய், மிளகு உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், கறுவா, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றின் விலைகளும் வெகுவாக அதிகரித்துள்ளன.
அதன் அடிப்படையில் ஒரு கிலோ கிராம் கறுவாப்பட்டை 3 ஆயிரத்து 900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் விசேட வகை கறுவா 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் செய்கையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படுகின்றது.
மேலும் ஒரு கிலோ கிராம் மிளகு ஆயிரத்து 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் ஏலக்காய் 2 ஆயிரத்து 300 ரூபா முதல் 2 ஆயிரத்து 400 ரூபாவிற்கு இடைப்பட்ட விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews