புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கையை இலங்கை அரசாங்கம் பெற முடிந்தால், அது நலிந்து போன இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் ஆக்கபூர்வமான பங்களிப்புக்கு வழிவகுக்கும். புலம்பெயர் தமிழர்களை முதலீடு மற்றும் உதவிக்கான சக்தி வாய்ந்த ஆதாரமாக இணைத்துக் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியமானது இலங்கை குறித்த அதன் ஏற்பாடுகளில் முன்மொழிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு சர்வதேச சமூகத்தினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு முயற்சியிலும் தமிழர்களை (இலங்கை வாழ் மற்றும் புலம்பெயர்) பங்குதாரர்களாக உள்ளடக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,