உக்ரைன் மீது அணுகுண்டு தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா

உக்ரைன் மீது புடின் அணுகுண்டு வீசலாம் என்ற அச்சத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அணுக்கதிரியக்கத்தை உணரும் திறன் கொண்ட விமானங்களை அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புடின் உக்ரைன் மீது ஒரு குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதத்தைப் பிரயோகிக்கக் கூடும் எனவும் பென்டகன் அதிகாரிகள் நம்புகின்றனர்.

இந்நிலையில், உடனடியாக போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும், மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை தெரிவிப்பதற்காகவும் ரஷ்யா அதைச் செய்யக்கூடும் எனவும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர். எனவே, அணுக்கதிர் வீச்சை உணரக்கூடிய பல மில்லியன் மதிப்பிலான விசேட ஜெட் விமானங்களை உக்ரைனுக்கு வழங்க, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

WC-135W Constant Phoenix என்னும் பெயரில் அழைக்கப்படும் இந்த இரகசிய ஜெட் விமானங்கள் மிகவும் முக்கியமான சொத்து எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

புடின் சைபீரியாவில் ஒரு இரசாயன ஆயுதத்தைப் பரிசோதிப்பாரானால், அதிலிருந்து வெளியாகும் வாயுவை வானத்தில் பறந்தபடி உணர்ந்துகொள்ளும் திறன் கொண்டவை இந்த விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews