
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது இராஜதந்திர கடவுச்சீட்டுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையுடன் இந்த ஆர்வம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இராஜதந்திர கடவுச்சீட்டுகளை தயார் செய்யாத பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கான புதிய விண்ணப்பங்களை செய்து வருவதுடன், கடவுச்சீட்டு காலாவதியானவர்களும் அவற்றை புதுப்பித்து வருகின்றனர்.
இராஜதந்திர கடவுச்சீட்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மற்றும் நாடாளுமன்றத்தால் எளிதாக ஏற்பாடு செய்யப்படலாம்.
இராஜதந்திர கடவுச்சீட்டுகள் வைத்திருப்பவர் விமான நிலையங்களுக்கு இடையே எளிதாகப் பயணம் செய்து சில நாடுகளில் விசாவைப் பெறலாம்.