
சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை ஜமாலியா கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 54 பேரை கடற்படையினர் நேற்றிரவு (02)கைது செய்துள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் மூன்று சிறுவர்கள், ஆறு பெண்கள் அடங்குவதாக கடற்படையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களை தற்போது திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைத்து வாக்குமூலம் பெற்றுவருவதுடன் இன்று(03) மாலை திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.