யாழ் மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் சங்கமும் நாளை முதல் வீட்டிலிருந்து வேலையாற்றுவதுடன் மக்களுக்கான. கொடுப்பனவை வழங்காமலிருக்கவும் தீர்மானம்…..!

யாழ் மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் சங்கமும் நாளை முதல் வீட்டிலிருந்தே பணியில் ஈடுபடவுள்ளதாக யாழ் மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் சங்கம் இன்று அறிவித்துள்ளது. யாழ் மாவட்ட. செயலருக்கு அனுப்பிய கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட விபரங்கள் வருமாறு. எரிபொருள் நெருக்கடி காரணமாக பிரதேச செயலர்களினால் அத்தியாவசிய சேவையென முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது .  எனினும் பொரும்பாலான பல பிரதேச செயலர் பிரிவுகளில் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இதுவரை பெற்றோல் விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை .
 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக  கடந்த மே மாதத்திலிருந்து  மாவட்டத்திலுள்ள சமூர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த  106424 குடும்பங்களுக்கு தலாரூபா 5000.00 வீதம் சமுர்த்தி வங்கிகளினால் நாளாந்த நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இச் சமூகநலக் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றது .
இந்நிலையில் எமது சேவையை தொடர்ந்து மேற்கொள்வதற்கு சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எரிபொருளின்மையால் அலுவலகங்களுக்கு வருகை தந்து தமது கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதனைத் தங்களுக்கு மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம் .
எனவே எமது அலுவலர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை வழங்கும்வரை 04.07.2022 ந் திகதி தொடக்கம் எமது நாளாந்த சமுர்த்தி வங்கி வேலைகளிலிருந்தும், உலக வங்கி நிதி ஒதுக்கீட்டின் கீழ் தற்போது பொருளாதார நெருக்கடி நிலையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் நலனுதவிக் கொடுப்பனவிலிருந்தும்,  விலகியிருப்பதுடன் தற்போதைய அரச சுற்று நிரூபத்திற்கு அமைவாக வீடுகளிலிருந்தவாறு எமது கடமைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்பதனைத் தயவுடன் தங்களுக்கு அறியத்தருகின்றோம்  என்றுள்ளது
கடந்த புதன் கிழமையிலிருந்து சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிட தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews