
யாழ்.காங்கேசன்துறை – கொல்லன்கலட்டி பகுதியில ரம்புட்டான் பழத்தின் விதையை விழுங்கிய 10 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.
சம்பவத்தில் தர்மராசா தர்சிகன் (வயது-10) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். ரம்புட்டான் பழத்தை விழுங்கிய சிறுவன்
திடீரென சுகவீனமடைந்து மூச்சு எடுக்க அவதிப்பட்டபோது, தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும் சிறுவன் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது. வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெபாலசிங்கம் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார்.
சிறுவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக தெல்லிப்பழை ஆதார மருத்துவமனை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது