
நேற்றை தினம் பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட பன்னிரண்டு எல்லை தாண்டிய இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 8 ம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.





நேற்று முன்தினம் கடற்படையால் கைது செய்யப்பட்ட பன்னிரண்டு மீனவர்களையும்
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையால் ஒப்படைக்கப்பட்டு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே அவர்களுக்கு எதிர்வரும் 8 ம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது