தனியார் பேருந்து சேவையினருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருளை வழங்க அரச பேருந்து சாலையினர் இழுத்தடிப்பு செய்த நிலையல் மாலை 6 மணிவரை அப்பகுதியில் பரஸ்பர கருத்து முறண்பாடு ஏற்பட்டிருந்தது.
டீசல் வழங்கினால்தான் பேருந்தினை அப்புறப்படுத்துவோம் என தெரிவித்து தனியார் பேருந்து சேவையினர் கோரி வந்தனர். இந்த நிலயைில் தமது பேருந்துகளை உள்ளே அனுமதித்தால்தான் அடுத்த கட்டம் தொடர்பில் பேச முடியும் என சாலை நிர்வாகத்தினர் கூறிய நிலையில் இரு தரப்பினருக்குமிடையில் பரஸ்பர கருத்து முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் அரச பேருந்தினை வீதிக்கு குறுக்காக மீண்டும் நிறுத்தப்பட்ட நிலையில் கனகபுரம் பிரதான வீதியின் ஊடான புாக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பொலிசார் நிலைமையை கட்டுப்படுத் த பரஸ்பர மயற்சி எடுத்த போதிலும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நீண்ட நேரம் எடுத்தது.
இந்த நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட பேருந்தினை அப்பறப்படுத்தமாறு பொலிசார் கடும் தொனியில் சாலை நிர்வாகத்தினரிடம் தெரிவித்ததை அடுத்து பேருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
எனினும் அரச பேருந்து சாலை நிர்வாகத்தினரின் கடமை நேரமான 4.30 மணி நிறைவடையும்வரை இழுத்தடிப்பு செ ய்து தனியார் பேருந்து உரிமையாளர்களிற்கான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதில் தாமதத்தை ஏற்படுத்தினர்.
பின்னர், இன்று எரிபொருள் வழங்க முடியாது எனவும் நாளை 10 மணிக்கு வருமாறும் பொலிசாரிடம் தெரிவித்ததை அடுத்து தனியார் பெருந்து சேவை உரிமையாளர்கள் பேருந்துகளை அப்படியே நிறுத்திவிட்டு செல்வதாகவும், அரச பேருந்துகளை உள்ளேயோ அல்லது வெளியேயோ செல்ல முடியாதவாறு தாம் பேருந்துகளை தரிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கிளிநொச்சி பொலிசார் பேச்சுவார்த்தை நடார்த்தி நாளை காலை 7 மணிக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க சாலை நிர்வாகம் சம்மதம் தெரிவித்ததாக தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் உறுதியளித் தனர். அதனை தொடர்ந்து அனைத்து பேருந்துகளும் அப்புறப்படுத்தப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.