நாளை முதல் கிளிநொச்சி விவசாய போதனாசிரியர்கள் போராட்டம்.

விவசாய உற்பத்தியை கருத்தில் எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை இல்லை எனின் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தம் – விவசாய போதானாசிரியர்கள்

விவசாய உற்பத்தியை கருத்தில் கொண்டு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை இல்லை எனில்  அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தம் -விவசாய போதானாசிரியர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண விவசாய போதனாசிரியர் தொழுச்சங்கம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே அவ்வாறு குறிப்பிட பட்டுள்ளது. அது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தற்காலத்தில் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விவசாய உற்பத்திப்
பொருட்களின் தட்டுப்பாடு என்பனவற்றின் காரணமாக உணவுப்பாதுகாப்பு மற்றும்;
பசி, பட்டினி நிலைவரும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ள நிலையிலும் விவசாய அமைச்சும்,  விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் செயற்பாட்டை
துரிதப்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு அறிவித்ததும்  அனைவரும் அறிவீர்கள்.
விவசாய உற்பத்தியை ஊக்கிவிப்பதற்கு அப்பாற்பட்டு தற்போது பயிரிடப்பட்டுள்ள பயிர்களினை பாதுகாத்து உற்பத்தியினை பெற்றுக்கொள்ளவது
மிக அவசியமாகும்.

கோவிட் – 19 பேரிடர் காலப்பபகுதியில் முக்கியமாக சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு போன்றனவே மக்களின் முன்னிருந்து சேவை
ஆற்றியிருந்தன.  அக்காலத்தில் உணவு பஞ்சம் ஏற்படாது நாட்டில்
அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித மேலதீக கொடுப்பனவும் இன்றி எமது வடமாகாண விவசாயப் போதனாசிரியர்களும் எமது விவசாயிகளும் கைகோர்த்து செயற்பட்டிருந்தனர்.

விவசாய உள்ளீடுகளின் நடமாடும் விற்பனைச் சேவை, கண்டப்பயிர்செய்கையை
ஊக்குவித்தமை,விவசாய உள்ளீடுகளை வழங்கியமை, விவசாயிகளது விவசாய
நடவடிக்கையை களவிஐயம் மூலம் உறுதி செய்து சௌபாக்கியா கொடுப்பனவு மற்றும்
அசேதனப் பசளையை பெற்று கொடுத்தமை, விவசாயிகளின் உற்பத்திகளுக்கான சந்தை
வாய்ப்பு, பயிர்களில் நோய் மற்றும் பீடைத்தாக்கம் தொடர்பான
விழிப்புணர்வு பிரச்சாரம், பயிற்சி வகுப்பு போன்ற நடவடிக்கைகளை
மேற்கொண்டு, உணவு நெருக்கடி இல்லாது இருக்க எமது அற்பணிப்பான சேவையை
வழங்கியிருந்தோம்.

ஆனால் இன்று உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடும், விவசாய உற்பத்தி
பொருட்களின் தட்டுப்பாட்டால் மக்கள் பட்டினிக்கு உள்ளாகக்கூடிய நிலைவரும் என அறிக்கைகள் மட்டுமே வெளிவருகின்றன. அன்று கோவிட்-19 பெரும் தொற்று
காலப்பகுதியில் முன்னரங்க செயற்பாடுகளில் ஈடுபட்ட நாம் இன்று
முக்கியத்துவம் அற்றவர்கள் என கருதப்படுவதை நாம் முற்றாக
கண்டிக்கின்றோம்.

நாம் விவசாயிகளின் கள விஜயத்துக்கே எரிபொருளினையே கோரிநிற்கின்றோம்.
எனினும் எமது வெளிக்கள உத்தியோகத்தவர்களுக்கு என ஓர் பொறிமுறையோ அல்லது
முன்னுரிமையோ வழங்கப்படவில்லை. மேலும் இன்று வரை எரிபொருள் நெருக்கடி
காரணமாக பிரதேச செயலகங்களினால் அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களுக்கு
முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு
வருகின்றது. எனினும் எமக்கான எரிபொருள் இதுவரையில் முன்னுரிமை அடிப்படையில்  வழங்கப்படவில்லை.

வடக்கின் விவசாய உற்பத்தி பொருட்களின் தட்டுப்பாட்டால் மக்கள்
பட்டினிக்கு உள்ளாகக்கூடிய நிலைக்கு விவசாயத் திணைக்களத்தின் மேலதிகாரிகள், விவசாய அமைச்சின் மேலதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள்
போன்றவர்களே காரணமாவார்கள்.

கடந்த ஒரு மாத காலமாக வடமாகாண
விவசாயப் போதனாசிரியர் தொழிற்சங்கம் முன்வைத்த எந்தவொரு கோரிக்கைக்கும்
இதுவரை செவி சாய்க்க இல்லை.

விவசாய உற்பத்தியில் முதுகெலும்பாக இருக்கும் விவசாய போதனாசிரியர்களின்
வெளி களச் செயற்பாட்டுக்கு பெற்றோலுக்கான கோரிக்கையை விடுத்திருந்தும் அது
தொடர்பாக எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகளுக்கு எவ்விதமான பிரச்சினைகளுக்கும் வெளிகள விஐயம் மேற்கொள்ள
முடியாத துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

அது போல் விவசாயிகளின் எரிபொருள் தேவையை உணராது செயற்படுவதால் நெல் அறுவடை, சிறுதானிய உற்பத்தி, மரக்கறி உற்பத்தி, இலை மரக்கறி உற்பத்தி
என்பன முற்றாக கைவிட வேண்டிய நிலையில் விவசாயிகள்
காணப்படுகின்றனர். நாட்டின் விவசாய உற்பத்தியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு எரிபொருள் (மண்ணெண்ணெய் மற்றும் டீசல்) வழங்காது நாட்டின்
உணவு உற்பத்தியை அதிகரிப்பது சாத்தியமற்றது.

1. பயிர் செய்கின்ற நிலப்பரப்பை விவசாய உத்தியோகத்தர்கள் நேரடியாக பார்வையிட்டு விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப தீர்மான அடிப்படையில்
(பயிரின் வகை, நீர்ப்பாசன இடைவெளி, எரிபொருள் நுகர்ச்சிவீதம்) வழங்குதல்
வேண்டும.;

2. தற்போது செய்கை பண்ணப்பட்டுள்ள பயிர்களுக்கு பயிரின் வயது மற்றும்
அறுவடை காலம் என்பன கணிக்கப்பட்டு அவற்றுக்கான எரிபொருள் இருப்பை
உறுதிப்படுத்திய பின்னர் ஏனைய பயிர்ச் செய்கையை ஆரம்பித்தல் வேண்டும்.

3. நாட்டின் தற்போதைய நிலமைக்கு ஏற்ப குறுங்கால பயிர்களுக்கு முன்னுரிமை
வழங்கல் வேண்டும்

4. மின்சார இணைப்பு உள்ள பயிர் நிலங்களுக்கு எரிபொருள் வழங்குவதை
இயன்றளவு தவிர்த்தல்

எமது சேவையை தொடர்ந்து மேற்கொள்வதற்கு எரிபொருள் விநியோகத்தில்
முன்னுரிமை வழங்கும் வரை 06.07.2022 ஆந் திகதி தொடக்கம் இதுவரை காலம்
எம்மால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து  நேரடியான விவசாயிகளது வெளிக்களச்
செயற்பாடுகளையும் நிறுத்துகின்றோம்,

இருப்பினும் தற்போதைய அரச சுற்று
நிருபத்திற்கு அமைவாக வீடுகளிலிருந்தவாறு இணையவழியாக
பயிர் பாதுகாப்பு, பயிற்சி வகுப்பு மற்றும் தொழில்நுட்ப தகவல்களை எமது விவசாய பெருமக்களுக்கு வழங்குவோம் என்பதனை தெரிவிப்பதோடு, வடக்கின்
விவசாய உற்பத்தி பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மக்களின் பட்டினிக்கு நாமோ அல்லது எமது விவசாய பெருமக்களோ காரணம் இல்லை என்பதனை
மனவருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றோம் என்றுள்ளது
Attachments area

Recommended For You

About the Author: Editor Elukainews