3,724 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் இலங்கை வரவுள்ள கப்பல் மேலும் தாமதமடையக்கூடும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 06 மற்றும் 08 ஆம் திகதிகளுக்கு இடையில் குறித்த கப்பல் இலங்கை வந்தடைய இருந்தது.
எவ்வாறாயினும், வானிலை மாற்றம் காரணமாக குறித்த கப்பலின் வருகை மேலும் தாமதமடையக்கூடும் என லிட்ரோ அறிவித்துள்ளது.
அதன்படி, குறித்த கப்பல் எதிர்வரும் 9 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது.
ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் உலக வங்கிக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமையாக குறித்த கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது.
குறித்த ஒப்பந்தத்திற்கு அமைவாக மேலும் ஒரு எரிவாயு கப்பல் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரர் தெரிவித்துள்ளார்.