இவ் வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அங்குரார்ப்பன நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லடி சமுர்த்தி வங்கி வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போது மரவள்ளி, வற்றாளை, கத்தரி, மிளகாய் போன்ற பயிர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் ,பிரதேச செயலாளர் , சமுர்த்தி பணிப்பாளர் உள்ளிட்ட அதிதிகளினால் நடுகை செய்யப்பட்டன
ஒரு குடும்பத்தின் அன்றாட உணவுத் தேவையை ஓரளவேனும் தீர்ப்பதற்கான வேலைத்திட்டமாக இத்திட்டம் மாவட்ட மட்டம், பிரதேச மட்டம், கிராம மட்டங்களில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் கலந்து கொண்டார்.
நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் பசுமையான தேசம் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல வேண்டிய தேவை குறித்து கருத்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி கணக்காளர் பஸீர், மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் ஜே.எப்.மனோகிதராஜ், மாவட்ட சமுர்த்தி வங்கி பிரிவு முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதராஜ், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பரமலிங்கம், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் எமக்குத் தேவையான உணவுப் பயிர்களை நாமே செய்கையை செய்வதன் ஊடாக, எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவு பஞ்சத்தை ஓரளவேனும் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு செயற்திட்டமாக கருதியே இத்திட்டம் நாடளாவிய ரீதியில் இன்றைய தினத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.