கல்முனை பிராந்திய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ முன்றலில் ஒன்று கூடி தமக்கு எரிபொருளை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
போராட்டங்களை தொடர்ந்து இடத்திற்கு சென்ற கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக், கல்முனை பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட், தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஐ.ஓ.சி எரிபொருள் நிலைய உரிமையாளர்களுடன் கலந்துரையாடி சுமார் 210லீற்றர் பெற்றோல் பெற்றுக்கொடுத்தனர்.
எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை நிறுத்திய உத்தியோகத்தர்கள் வழமை போன்று தமது பணிகளை முன்னெடுத்தனர்.
போராட்டத்தின் போது கல்முனை பிராந்திய போக்குவரத்து டிப்போவில் எரிபொருளை பெற வந்திருந்த தனியார் பேரூந்துகள் வீதியை மறித்து காணப்பட்டமையினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.