
யாழ்.கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் வீடொன்றுக்குள் நுழைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடிய கும்பல் துவிச்சக்கர வண்டியையும் திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் காலை துவிச்சக்கர வண்டியை காணவில்லை. என தேடிய நிலையில் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலும் திருடப்பட்டமை அம்பலமாகியுள்ளது.