தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாரிய பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து மீண்டெளுவதற்க்கு அனைவரும் வீடுகளில் பயிரிடுமாறு இலங்கை செஞ்சிலுவைச் சங்க தலைவர் K. பாலகிருஸ்ணன் மற்றும் கரவெட்டி பிரதேச செயலர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றைய தினம் கரவெட்டி பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்ட விதைகள் வழங்கியபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கரவெட்டி பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு விதைகள் வழங்கும் நிகழ்வு கரவெட்டி பிரதேச இலங்கை செஞ்சிலுவைச் சங்க தலைவர் திரு ரகு தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க தலைவர் K.பாலகிருஷ்ணன், கரவெட்டி பிரதேச செயலர் திரு.தயாரூபன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டுத்தோட்டத்திற்குரிய விதைகள் மற்றும் பொருட்களை வழங்கி வைத்தனர்.
இதில் வீட்டுத் தோட்ட பயனாளிகள், பிரதேச செயலக ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 150 பேருக்கு விதைகள் வழங்கி வைக்கும் திட்டத்தில் இன்று ஐம்பது பயனாளிகளுக்கே வழங்கி வைக்கப்பட்டன.இதே வேளை உள்ளூர் விதை மற்றும் நாற்று உற்பத்தியாளர்களையும் ஊக்கிவிக்கவுள்ளதாகவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க தலைவர் மேலும் தெரிவித்தார்.