இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள முன்னணி வெதுப்பகங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் யாழில் வெதுப்பகங்கள் மூடப்படவுள்ளமை தொடர்பில் ஆராயப்பட்டது
குறிப்பாக நாட்டில் வெதுப்பகங்கள் மழை வெள்ளம் ஏற்படும்போது தான் வெதுப்பக உரிமையாளர்கள் தொடர்பில் அரசாங்கம் கரிசனை செலுத்துவது வழமை
டீசல் எரிபொருளை பெறுவதற்கு போறணை யை கொண்டு சென்று பெற முடியாது ஒரு பெரலில் தான் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும் ஆனால் அவ்வாறு எரிபொருள் பெற வரும்போது இன்று வாருங்கள் நாளை வாருங்கள் என கூறுவார்கள் எமக்கு டீசல் ஏன் தேவை என்பது அரசு மட்டத்தில் உள்ளவர்களுக்கு கூட தெரியாதுள்ளது
டீசல் எரிவதன் மூலமே சாதாரண மாவை பாணாக தருகின்றது அதற்கும் அரச தரப்பில் இருந்து கேட்கின்றார்கள் ஏன் மண்போறனை போட்டு இருக்கலாமே என்று!மண்போறனையை பாவித்து கொண்டு இருந்தபோது சுகாதாரப் பகுதியினரை எங்களுக்குள் செலுத்தி நவீன யுகத்துக்கு மாறுவதற்குரிய சூழ்நிலை உருவாகியது, இன்று அதே தரப்பினர் கேட்கின்றார்கள் ஏன் மண்போறனையை பாவிக்கலாம் தானே என்று, யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் விறகுபாவனை மிகவும் குறைவாக இருந்தது மண் போறனை பாவித்தால் எமக்கு ஒரு மாதம் 100 லோட் விறகு தேவைப்படும்
தற்பொழுது அரசியல்வாதிகளும் ஓடி ஒளிந்து விட்டார்கள். அவர்கள் இதனைப் பற்றி கதைப்பதற்கு தயாராக இல்லை எனினும் தற்போது அரச அதிபர் வாயிலாக எங்களை அலட்சியப்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுகின்றோம். குறிப்பாக சுனாமி வெள்ளப்பெருக்கு மழை ஏற்படும் போது மாத்திரம் தான் வெதுப்பக உரிமையாளர்களை கூப்பிட்டு கதைப்பார்கள் ஆனால் தற்போதைய நிலையில் யாரும் எமது பக்கத்திற்கு கதைப்பதற்கு இல்லை
நமக்கு ஒரு நாளைக்கு 200 லீற்றர் தேவைப்படும் இடத்து 20 லீற்றர் தருவதாக கூறுகின்றார்கள் அவ்வாறான நிலையில் எமது பேக்கறி தொழிலை மேற்கொள்வது மிகவும் கடினமான ஒரு செயலாக காணப்படுகின்றது.
எனவே மாவட்ட செயலகம் அத்தியாவசிய சேவைக்கு எரிபொருள் விநியோக்கின்ற நிலையில் பேக்கரி பொருளை உற்பத்தி செய்வதற்கு எரிபொருள் விநியோகிக்காத பட்சத்தில் கட்டாயமாக எமது தொழிலை இடைநிறுத்தி பேக்கரிகளை பூட்ட வேண்டிய நிலை ஏற்படும் பேக்கரி உற்பத்திகளை தொடர்ச்சியாக உற்பத்தி செய்ய வேண்டும் பொது மக்களும் அதனை பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால் தொடர்ச்சியாக எரிபொருளை பெற்றுக் கொடுக்குமிடத்து அதை தொடர்ந்து செயற்படுத்த முடியும் , தவறும் இடத்தில் எமது பேக்கரிகளை மூடிவிட்டு வேறு தொழிலை பார்க்க வேண்டிய நிலை ஏற்படும் அரச அதிபரின் முயற்சியினால் மா தடையின்றி கிடைக்கின்றது ஆனால் அந்த மா மூலம் பாண் உற்பத்தி செய்யக்கூடிய டீசல் இல்லாமையினால் பேக்கறி உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.என தெரிவித்துள்ளனர்,