
ஜனாதிபதியையும் பிரதமரையும் உடனடியாக பதவி விலகுமாறு கோருவதென்று சற்று முன்னர் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பிரகாரம் சபாநாயகரை தற்காலிக ஜனாதிபதியாக பதவி வகிக்குமாறும் இக்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலைமையினைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ.சுமந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.