
சிறீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில் ஜனாதிபதியை உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தற்போதைய சூழ்நிலை குறித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள கட்சி தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
இதேவேளை, பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பிரதமர் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.