ஜனாதிபதி பதவி தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

இலங்கையின் ஜனாதிபதியாக, கோட்டாபய ராஜபக்சவால் தனது கடமைகள் மற்றும் அதிகாரங்களை தொடர்ந்து நிறைவேற்ற முடியுமா என்பதை பரிசீலிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேசத்தின் அரசியல் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படுவதை உடனடியாக உறுதிப்படுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்குழு வேண்டுக்கோள் விடுத்துள்ளது.

அத்தகைய மாற்றத்தை உறுதி செய்வதில் எந்த தாமதமும் இருக்கக்கூடாது என்பதுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இனி எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு பொலிஸ்துறை மற்றும் ஆயுதப் படையினரை வலியுறுத்தியுள்ளது.

பொது சொத்துக்களை குறிப்பாக இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகை போன்றவற்றை பாதுகாக்குமாறும், எவருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு உறுதி செய்யுமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews