
நடந்து வரும் போராட்டங்களைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் கடும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜனநாயகத்திற்கு ஊடக சுதந்திரம் மிக முக்கியமானது. எந்தவொரு வன்முறையையும் தடுப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாதுகாப்புப் படையினரும் மற்றும் போராட்டக்காரர்களும் நிதானத்துடன் செயல்படுமாறு பிரதமர் கேட்டுக்கொள்கிறார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்ல வளாகத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீதே இவ்வாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.