
மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காது மக்கள் போராட்டத்தை கணக்கில் எடுக்காது பதுங்குக்குழிக்குள் இருந்துகொண்டு பதவியை தக்கவைத்துக்கொள்ள முயற்சித்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, நேற்றைய தினம் ஜனாதிபதி மாளிகையிலிருந்து பின்கதவால் செல்ல நேர்ந்தது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டை நேசிக்கும் மக்கள் விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். அதாவது, கோட்டாபய ராஜபக்ஸவின் இராணுவ பலத்துக்கு மேலாக மக்கள் பலம் என்பது பிரபலமானது முக்கியமானது என்பதை நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு உணர்த்தியுள்ளனர்.
ராஜபகஷர்களின் ஏகாதிபத்திய போக்கு இந்த மக்கள் எழுச்சியுடன் நிறைவுக்கு வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.