அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: 11 ஊடகவியலாளர்கள் உட்பட 103 பேர் காயம்!

அரசாங்கத்திற்கு எதிராக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களில் 103 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் பலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருநது சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும், மேலும் 55 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் 11 ஊடகவியலாளர்களும் 05 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றிரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் பலரையும் தாக்கியுள்ளனர்.
அவர்களில், ´அத தெரண´ மற்றும் ´சிரச´ செய்தியாளர்களும் ஊடகவியலாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கவலை தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews