
இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக, பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தாரிக் அஹமட் ஆகியோர்
உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவுகளினூடாக இதனை குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், அமைதியான ஆர்ப்பாட்டமும், கருத்து சுதந்திரமும் இலங்கையின் ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அமைதியான போராட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
