அரசியலுடன் தொடர்புடைய மற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு அரசியல் மாற்றத்திற்கான பாதை எனும் நிகழ்ச்சி திட்டத்தினை பெப்பரல் நிறுவனத்தினால் இலங்கையில் பல மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .
அந்தவகையில் கிழக்குமாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைய மட்டக்களப்பு தீரனியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தின் உளநல மருத்துவ சேவை ஆலோசகர் வைத்திய நிபுணர் வைத்தியர் ஜூடி ஜெயகுமார் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கு பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் துப்பரவு பணியினை மட்டக்களப்பு நகரிற்கு இலங்கையின் பல மாவட்டங்களில் இருந்து வருகை தந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களின் பங்களிப்புடன் வாவிக்கரை வீதி மற்றும் அதனை அண்டிய வாவிக்கரையோர பகுதிகளில் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
தீரனியம் திறந்த பாடசாலையின் செயல்பாடுகள் அதன் தொடர்பாடல்கள் தொடர்பான தெளிவூட்டல்களும் ,அதற்கான கையேடுகளும் வைத்தியர் ஜூடி ஜெயகுமாரினால் வழங்கப்பட்டன.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட சிரமதான பணியில் மட்டக்களப்பு சமூக நலன் சார் பணியாளர்கள் சமூக அமைப்பின் பெண் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .