மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் ஹெல்ப் ஹெவர் அமைப்பானது’வறுமையை ஒழித்து வளர்ச்சியை காண்போம் ‘எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்காக கொண்டு வறுமை கோட்டின்கீழ் குடும்பங்களில் வாழ்வாதாரம், மாணவர்களின் கல்வி ,சுகாதாரம் போன்ற அடிப்படை அபிவிருத்தி வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது .
இதன் ஒரு செயல்பாடாக பாடசாலை மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்களின் கற்றல் செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில் மட்டக்களப்பு ஹெல்ப் எவர் அமைப்பின் ஏற்பாட்டில் அமெரிக்கா நாட்டு நன்கொடையாளரான சஜித் பிரதீஸ் நிதி பங்களிப்பில் மட்டக்களப்பு வெட்டுக்காடு ஸ்ரீ புத்து நாகம்மா அறநெறி பாடசாலை மாணவர்களின் கற்றல் செயல்பாட்டுக்கான அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன .
பாடசாலை பொறுப்பாசிரியர் டி .அனுஷாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஹெல்ப் எவர் அமைப்பின் தலைவர் உட்பட ஹெல்ப் எவர் அமைப்பின் உறுப்பினர்கள் ,அமைப்பின் திட்டத்திற்கான ஊக்குவிப்பாளர்களான சௌமினி ரவிசந்திரன் ,காயத்திரி உதயகுமார் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர் .