
மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவையில் பயணிக்கும் அரச ஊழியர்களின் அடையாள அட்டையை பரிசீலிக்க இ.போ.சபை தீர்மானித்துள்ளது.
இந்த நடைமுறை நாளை தொடக்கம் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து சாரதிகள் அல்லது அவர்களின் உதவியாளர்கள் பயணிகளின் தொழில் அடையாள அட்டைகளை சரிபார்ப்பது நடைமுறையில் இல்லை.
எனினும் தற்போதைய சூழ்நிலையில் பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதே இதன் நோக்கம்
என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க குறிப்பிட்டார். மாகாணத்தின் உள்ளே பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும்
பயணிகளிடம் தொழில் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்படுவதில்லை. ஆனால் மாகாணங்களுக்கு இடையே பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும்
பயணிகளிடம் தொழில் அடையாள அட்டை உள்ளமை தொடர்பில் சரிபார்க்கப்படும் என்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்