நாட்டில் கடந்த 9ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே ஏற்பட்ட அமைதியின்மையின் போது செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதமைக்காக பொதுச் சேவை ஆணைக்குழு அங்கீகாரத்தின் கீழ் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் லியனகேவை காவல்துறைமா அதிபர் பணி இடைநிறுத்தம் செய்துள்ளார்.
சனிக்கிழமையன்று பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே பணியில் இருந்த காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் பல செய்தியாளர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.