
இதேவேளை கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் சுதந்திரமான தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். “சட்டபூர்வமான தேர்தலை ஒரு கும்பல் கவிழ்க்க இந்தியா எப்படி அனுமதிக்கும்?
மேலும் அப்படியானால் நமது சுற்றுப்புறத்தில் உள்ள எந்த ஒரு ஜனநாயக நாடும் பாதுகாப்பாக இருக்காது. இந்தியாவின் இராணுவ உதவியை ராஜபக்சே விரும்பினால் நாங்கள் வழங்க வேண்டும்” என்று இந்தியாவின் பிரபல அரசியல்வாதி சுப்பிரமணிய சுவாமி ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.