கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் அரச அதிபரிடம் முறைப்பாடு….!

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிற்கு மட்டுப்படுத்தப்பட்ட பசளை கிடைத்துள்ளமைதொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனிடம் விவசாயிகள் முறையிட்டுள்ளனர்.
இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை இரணைமடு விவசாய சம்மேளத்தினர் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு 40 அந்தர் உரம் மாத்திரமே கிடைத்துள்ளது. ஏனைய விவசாயிகள் உரம் இல்லாது தவிக்கின்றனர். இந்த நிலையில் அவர்களிற்கான உரத்தினை பெற்று கொடுக்க அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எரிபொருள் பிரச்சினை காரணமாக இந்த வருடம் விதைப்புக்கான காலம் பிந்தியது. இந்த நிலையில் தற்பொழுது பசளைக்காக காத்திருக்கும் விவசாய நிலங்களிற்கு உரத்தினை பெற்று தருவதற்கு அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுக்க வே்ணடும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கமநல சேவைகள் திணைக்களத்தின் புள்ளி விபரத்திற்கு அமைவாகவே மாவட்டத்திற்கு இந்த உரம் கிடைத்துள்ளது. காலம் பிந்தி விதைத்தாலும் தற்பொழுது 50 நாட்களிற்கு குறைவான பயிராக காணப்படும் வயல் நிலங்கள் தொடர்பில் கமநல சேவைகள் திணைக்களம் ஊடாக புள்ளி விபரத்தை விரைந்து தாருங்கள்.
இந்த விடயம் தொடர்பில் குறித்த திணைக்கள அதிகாரிகளிற்கும் குறிப்பிட்டுள்ளேன். அவர்களிற்கான உரத்தினை சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி பெற்று தருவதற்கு முயற்சி மேற்கொள்வேன் என இதன்போது விவசாயிகளிடம் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் விவசாய அமைப்புக்கள், திணைக்களங்களுடனான சந்திப்பொன்றை எதிர்வரும் வியாழக்கிழமை ஏற்பாடு செய்துள்ளுன். அதில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து கொள்ளலாம் எனவும் அவர் விவசாயிகளிற்கு தெரிவித்திருந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews