ஊருகஸ்மந்திய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு. ஒருவருக்கு காயம் –

காலி மாவட்டம் ஊருகஸ்மந்திய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஊருகஸ்மந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஊரகஸ்மங்ஹந்திய, கோரகின பிரதேசத்தை சேர்ந்த தில்ஷpக இரோஷன் என்ற நபரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

அவர் தனது நண்பர்களுடன் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்த போதே அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

தனிப்பட்ட பகையே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews