கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலக பகுதியில் சற்றுமுன் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரரொருவர் காயமடைந்துள்ளார்.
அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ச்சியாக கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், வானை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளதாக. செய்திகள் தெரிவிக்கின்றன.