
அரச ஊடகமான தேசிய ரூபவாஹினியின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பெருந்திரளானோர் கூடி தேசிய ரூபவாஹினிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது அப் பகுதியில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது
.
அரச ஊடகமான தேசிய ரூபவாஹினியின் கலையகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து கலையகத்தினை முற்றுகையிட்டுள்ளதுடன், செய்தி ஒளிப்பரப்படும் கலையகத்தையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.