
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் மருதங்கேணி நோக்கி பயணித்த கயஸ் ரக வாகனமும் துவிச்சக்கர வண்டியுமே விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்துக்கு உள்ளானவர் குடத்தனை வடக்கு பகுதியை சேர்ந்த ஈசன் என்பவரே படுகாயம் அடைந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.