
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சிறிய ரக வாகனம் சிறப்பு அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சிறப்பு அதிரடிப்படையினர் மணல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டு வந்திருந்த மகேந்திரா ரக. சிறிய ரக வாகனம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
தற்போது குறித்த வாகனம் பருத்தித்துறை பொலிசாரிடம் ஒஉரிய சட்ட நடவடிக்கைகளுக்காக சிறப்பு அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.