கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த இளம் தந்தையின் மரணம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் நேற்று (13) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கண்ணீர் புகைக்குண்டு வீசி உயிரிழந்ததாக கூறப்பட்ட இளைஞனின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, கரோனரி தமனிகளில் இரத்தம் உறைந்ததால் ஏற்பட்ட மாரடைப்பு மரணத்திற்கு காரணம் எனவும், மேலும், இந்த நபர் பல்வேறு நச்சு போதைப் பொருட்கள் (ஹெரோயின், ஐஸ்) மற்றும் மதுபானங்களுக்கு அடிமையானவர் எனவும்,சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில், மஹவ, தலதாகம பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான டி.எம்.ஜாலிய திஸாநாயக்க என்ற 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.