ரணில் உடனடியாக பதவியை துறக்க வேண்டும்: வாசுதேவ நாணயக்கார.

பதில் ஜனாதிபதி பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மக்கள் ஆணை இல்லாது ரணில் விக்ரமசிங்கவை முன்னாள் ஜனாதிபதி தன்னிச்சையாக பிரதமராக நியமித்தமை பொது மக்களைப் போராட்டத்திற்கு அழைத்த மிக முக்கியமான காரணியாக அமைந்ததுள்ளது. முன்னாள் ஜனாதிபதியை தொடர்ந்து பதில் ஜனாதிபதி ரணிலும் இராஜினாமா செய்து, சர்வகட்சி அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்க வேண்டும். மதத் தலைவர்கள், சட்டத்தரணிகள் சங்கம், தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புக்கள் மற்றும் ஆர்வலர்கள் தொடர்ந்து இதே கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews